முகம் கண்ணாடி போல பளபளக்க ஜப்பானிய ரகசியம்! வீட்டில் உள்ள ‘அரிசி’ போதும்.

109

பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், முகம் வெள்ளையாக இருக்க அரிசியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • அரிசி- 2 ஸ்பூன்
  • பால்- 1 கப்
  • தண்ணீர்- ½ கப்
  • தேன்- 1 ஸ்பூன்

முதலில் அரிசியை 2- 3 முறை நீரில் நன்கு கழுவிக்கொள்ளவேண்டும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி, தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின் இதனை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைத்து வேகவைக்கவும்.அரிசி வெந்த பிறகு, அடுப்பை அனைத்து இதை நன்கு ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்.இதற்கடுத்து, இதனுடன் தேனை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலரவிடவும்.அதன்பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு வெள்ளையாக மாறும்.