மீனவர்கள் கவனத்திற்கு! காற்றின் வேகம் அதிகரிப்பால் கடல் சீற்றமடையும் அபாயம்.!!

156

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவுவதுடன், மணித்தியாலத்திற்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களுத்துறை தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களிலும், மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 – 50 கி.மீ வரை அதிகரித்து வீசக்கூடும்.

இதன் காரணமாகக் குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.