மீண்டும் திறக்கப்பட்டது முகத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வரா முன்பள்ளி!

334

முகத்தான்குளத்தில் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

முகத்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரா பாலர் பாடசாலையின் திறப்பு விழாவும் கால்கோள் விழாவும் நேற்றைய தினம் (13.02.2026) முற்பகல் 9.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றதூது. புதிய கல்வியாண்டை முன்னிட்டு சிறார்களின் கல்வி பயணத்தை சிறப்பாக ஆரம்பிக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டு புதிதாக கல்வி பாதையில் அடி எடுத்து வைக்கும் சிறார்களை ஊக்குவிக்க பரிசில்களும் பெரியவர்களின் ஆசிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாசப்பறவைகள் நண்பர்கள் வட்டமும் செட்டிகுளம் மகா வித்தியாலய ரீனேஜ் குழு  பழைய மாணவர்களும் அனுசரணை வழங்கியிருந்தனர்.

முகத்தான்குளம் கிராமத்தில் நீண்டகாலமாக இயங்கா நிலையில் இருந்த இப்பாலர் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது கிராமத்தின் கல்வி முன்னேற்றத்தில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.