மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு.!

238

கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்மடுக்குளத்தின் கீழ் பெரும்போக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியிலேயே குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த யானையானது பெரும்போக நெற்ச்செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.