மின்கட்டண சுமை குறையுமா? மூன்று ஆண்டு கால அவகாசம் கேட்கும் புதிய அரசாங்கம்.

139

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். எனினும் வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.

மின் உற்பத்திச் செலவை மீட்டெடுக்க மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. எனினும் மின் கட்டணங்களைக் குறைக்க உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் இதை அடைய அரசாங்கம் ஒரு நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.