மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு..!

198

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில் சனிக்கிழமை (28) காலை வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவிலாறு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. பணியாளர்கள் கவனித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதையடுத்து, குறித்த குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரப்படுகின்றன.