மாடியிலிருந்து விழுந்த கான்கிரீட் துண்டு – 7 வயது சிறுவன் பலி.!!

125

மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு (Colombo) – முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, சிறுவன் தனது பாட்டியுடன் வீட்டு வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ​​கான்கிரீட் ஸ்லாப்பின் துண்டுகள் உடைந்து விழுந்ததால், பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த கட்டடத் தொகுதியின் உறுதி மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.