மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.

173

மழை முன்னறிவிப்பு: இரணைமடுக்குளத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

காலநிலை எதிர்வுக் கூறலும், இரணைமடுக்குள நீரேந்து பிரதேசத்தில் பதிவான தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் காரணமாக, இரணைமடுக்குளத்தின் ஆறு வான் கதவுகள் இன்று (—) காலை 9.00 மணியளவில் திறந்து விடப்பட்டுள்ளன.

 

இதன்படி, ஆறு வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 06 அங்குல அளவிலும், நான்கு வான் கதவுகள் 01 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையினூடாக 0.149 மில்லியன் கன மீற்றர் (Mcm) அளவிலான நீர் வெளியேற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்தும் மழை எதிர்வுக் கூறல் நிலவுகின்ற சூழ்நிலையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.