யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

90

யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை (01.01.2026) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான நபரொருவர் மேற்கொண்ட சரமாரிக் கத்திக்குத்துத் தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறைப் பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றா என்பவரின் கணவராவார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.