மன்னாரில் நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக்: ஆரம்பம்

203

மன்னார் பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று (09.01.2026) அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது.

இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த காரணத்தால், நோயாளிகள் பயண சிரமங்கள் மற்றும் கூடுதல் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வந்திருந்தனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம். எச். எம். அஸாத் அவர்களின் வேண்டுகோளின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன், அங்கு பணிபுரியும் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் தொடங்கப்பட்டுள்ளது.

 

புதிய கிளினிக்கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.