மனைவியை தீயிட்டு கொன்ற கணவன் – பொலிஸார் வலைவீச்சு!

94

பறங்கஸ்பஸ்வெவ, மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் தனது மனைவிக்குத் தீ வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் பறங்கஸ்பஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்மணி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பறங்கஸ்பஸ்வெவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் கணவனே இக்கொலைக்குக் காரணமான பிரதான சந்தேக நபர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குற்றத்தைச் செய்த சந்தேக நபர் தற்போது தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.