மணலோடு மாட்டிய தமிழ் பொலிஸ் அதிகாரியின் டிப்பர்!

185

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனம் சட்டவிரோத மணலுடன் கைப்பற்றல்!

 

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டபோது முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் பொலிஸ்  உத்தியோகத்தரான குறித்த தமிழ் நபர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பருத்தித்துறை கற்கோவளத்தில் அகழ்ந்த மண்ணை ஏற்றிச் சென்ற டிப்பரை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இடைமறித்தனர் எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி டிப்பரை ஓட்டிச் சென்றுள்ளார் அதனை விரட்டிச் சென்ற பொலிஸார் சாவகச்சேரி நவற்குழி பகுதியில் வைத்து டிப்பரைக் கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் காங்கேசன் துறை விசேட குற்றப்பிரிவு போலீசார் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை மறிக்க முற்பட்டபோது வாகனத்தை நிறுத்தி விட்டு சாரதி தப்பி ஓட முற்பட்டபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.