மட்டக்களப்பு சித்தாண்டியில் பேருந்து – லொறி மோதி விபத்து: பலர் காயம்.!

132

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து மற்றும் லொறி மோதிய விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்முனை மற்றும் கதுருவளை இடையே சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து ஒன்று, எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தின் தாக்கம் காரணமாக லொறி கடுமையாக சேதமடைந்துள்ளது. லொறியில் பயணித்தவர்கள் பலரும் படுகாயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, விபத்தில் தனியார் பேருந்தும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. விபத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.