மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரிப்பு: மக்கள் மற்றும் ஆலயங்களுக்கு எச்சரிக்கை.!

93

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அண்மையில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு, உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் [16 மார்ச் 2026] திங்கட்கிழமை ஊடக மாநாட்டில் தெரிவித்தார். வெற்று காணிகள் டெங்கு நுளம்பு உருவாக்கக்கூடிய நிலையில் உள்ள இடங்களின் உரிமையாளர்கள் சமூக அக்கறையுடன் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்; இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

செங்கலடி, மட்டக்களப்பு மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து, பலர் சிகிச்சை பெற்றுள்ளனர். வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிப்பது மற்றும் சுத்தப்படுத்துதல் உடனடி நடவடிக்கையாகும். ஏற்கனவே சில காணிகள் மாநகர சபையால் சுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிலர் சமூக அக்கறையின்றி ஆலோசனைகளை புறக்கணித்து வெற்று காணிகளை துப்பரவு செய்யவில்லை. இதனால் அப்பாவி பொதுமக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் உள்ள ஹிந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவை டெங்கு ஒழிப்பு அறிவுறுத்தல்களை ஒலி பெருக்கி ஊடாகவும் பகிர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூக உணர்வு இல்லாத சில ஆலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை பாடசாலைகளில் மாணவர்களின் உளநலத்தை பேண, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாட வேளைகள் வழங்கப்பட வேண்டும்; வங்கிகள் சமூக அக்கறையுடன் நிதி வழிகாட்டல் செய்யும் வழிமுறைகளையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.