மகாவலி ஆற்றில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

122

கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் நாவலப்பிட்டி, சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கம்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.