மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்ததாகக் கூறப்படும் விமானம் விபத்து!

175

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்ததாகக் கூறப்படும் விமானம் விபத்து.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்ததாக தகவல்கள் பரவும் ஒரு விமானம், இன்று (27.01.2026) பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்றுகொண்டிருந்த இந்த விமானத்தில் அஜித் பவார் இருந்தாரா, மேலும் அவரது தற்போதைய நிலை என்ன என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

சமூக ஊடகங்களில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவை உறுதிப்படுத்தப்படாதவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.