பொதுமக்களுக்கு எச்சரிக்கை: போலியான எரிபொருள் அனுமதிப்பத்திர மோசடி.!!

142

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களுக்காக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாக போலியான சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில், வலைத்தள பயனர்களை தவறாக வழிநடத்தி, தங்கள் தனிப்பட்ட நிதி தகவல்களை திருட முயற்சிக்கப்படுகிறது.

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:

  1. சந்தேகமான இணைப்புகளை (Links) க்ளிக் செய்ய வேண்டாம்.
  2. அதிகாரபூர்வமற்ற வலைத்தளங்கள், செய்தி இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்களில் பகிரப்படும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
  3. மோசடியில் ஈடுபடுபவர்கள் URL-இல் சிறிது மாற்றப்பட்ட எழுத்துப்பிழைகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றலாம்; எனவே வலைத்தளத்தின் பெயர் மற்றும் எழுத்துக்களை கவனமாக சரிபார்க்கவும்.

அதிகாரபூர்வ இணையத்தளம்:

https://fuelpass.gov.lkதேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைக்கு ஒரே அதிகாரபூர்வ வலைத்தளம்.

சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க:

பொதுமக்கள் இந்த மோசடி அல்லது சைபர் குற்றங்களை எதிர்கொள்வின் போது Sri Lanka CERT குழுவில் புகார் அளிக்கலாம்.

இந்த எச்சரிக்கையை பின்பற்றி, இணைய பாதுகாப்பையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.