பெருமளவான  கஞ்சா கடத்தல்: ரூ.128,000 பணத்துடன் இருவர் கைது.!!

152

சிலாபம் – தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை மதியம், சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றது.

இந்த நடவடிக்கையின் போது 10 கிலோகிராம் 787 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 128,000 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிலாபம் சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவரும் 26 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.