பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து… புறக்கணிக்க கூடாத அறிகுறிகள்.!!

124

இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடமே காணப்பட்ட நிலையில் இப்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பாதிப்புகள் கடைசி கட்டத்தில் தான் வெளிப்படுகின்றன.

கால மாற்றம் உடலில் பல பிரச்னைகளை உண்டாக்குகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் உடல்நலப் பிரச்னைகளை வெளியில் சொல்ல தயங்குகிறோம். குறிப்பாக மலம் கழிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. ஆனால் மருத்துவர்கள் அப்படிச் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள். காரணம் அந்த பாதிப்பை சந்தித்திருப்பவர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பவர்களால் சரியான நேரத்தில் மருத்துவரை அணுக நம்மை அறிவுறுத்த முடியும். அப்படியான வகையில் பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படும் பாதிப்பை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடமே காணப்பட்ட நிலையில் இப்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பாதிப்புகள் முதல் அல்லது இரண்டாம் கட்டங்களில் தெரியாமல் கடைசி கட்டத்தில் தான் வெளிப்படுகின்றன.

அறிகுறிகள் ஏன் தெரிவதில்லை?
நாம் இந்த புற்றுநோயை தாமதமாகக் கண்டறிவதற்கான முக்கிய காரணம் வலி இல்லாததுதான். உண்மையில், அதிக வலியை ஏற்படுத்தும் நோய்கள் மட்டுமே அனைவராலும் தீவிரமாகக் கருதப்படுகின்றன. பெருங்குடல் புற்றுநோயில் பலரும் இந்த வலியை உணரவில்லை. ஆனால் குடல் பழக்கத்தில் மாற்றம் உண்டாகும்போதும் இதனைப் புறக்கணிக்கிறார்கள்.வயிற்றில் ஏற்படும் வீக்கம் அல்லது மூல நோய் பிரச்சனை என்று தவறாக நினைக்கிறார்கள். பல ஆய்வுகளின்படி குடல் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

  • மலத்தின் வடிவத்தில் மாற்றம்உங்களுக்கு அடிக்கடி பென்சில் வடிவிலான அல்லது மிக மெல்லிய மலம் இருந்தால், அவற்றை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. மருத்துவர்களின் கூற்றுப்படி, நமது மலக்குடல் அல்லது பெரிய குடலில் ஒரு கட்டி வளரும்போது, ​​அது மலம் வெளியேறுவதைத் தடுக்கிறது. இது அதன் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • மலத்தில் சளி
    பெருங்குடலின் வெளிப்புற மேற்பரப்பு கட்டியின் காரணமாக வீக்கமடையும் போது, ​​மலம் கழிக்கும் போது ஜெல்லி போன்ற அல்லது ஒட்டும் சளி உருவாகிறது. எனவே, இதைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
  • மலத்தில் இரத்தம்
    மலத்தில் இரத்தம் வருவது புற்றுநோயின் அறிகுறியாக எளிதில் இருக்கலாம். உண்மையில், வேறு எந்த அறிகுறிகளையும் நீங்கள் கவனிக்காவிட்டாலும், இந்த அறிகுறியைக் கண்டவுடன் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
  • வயிறு எரிச்சல் அல்லது மலச்சிக்கல்உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் இருந்தால் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் எப்போதும் இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இந்த புற்றுநோயால் இது போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் பொதுவானது.

இந்த அறிகுறிகளை நீங்கள் மீண்டும் மீண்டும் புறக்கணித்தால், அது உங்கள் முழு உடலுக்கும் பரவும். ஆரம்ப கட்டத்திலேயே அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வதன் மூலம், நீங்கள் எளிதாக சிகிச்சை பெறலாம். இல்லாவிட்டால் இறுதியில் உங்கள் உடல் ஒரு ஆபத்தான செயல்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு என்படஹு உணருங்கள். முடிந்தவரை விரைந்து சீக்கிரம் சிகிச்சை பெறுவது நல்லது.