பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை.!!

56

புத்தளம், தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவில பகுதியில் 65 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கோணவில பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலையடுத்துத் தங்கொட்டுவ பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தன்று கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்திப் பெண்ணின் கழுத்துப் பகுதியை அறுத்துக் கொடூரமான முறையில் இந்தக் கொலை முன்னெடுக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை | Woman Murdered By Slitting Her Throat

கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவராத நிலையில், இந்த கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காகத் தங்கொட்டுவ பொலிஸார் பல கோணங்களில் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.