பெண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களுக்கு இயற்கை தீர்வு

172

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

தேநீர் பேக்ஸ்- தேநீரில் உள்ள காஃபின் வீக்கத்தையும் கருவளையத்தையும் குறைக்கும். தேநீர் பேக்ஸ்களை சூடுநீரில் ஊறவைத்து, பிறகு குளிர வைத்து கண்களில் வைக்கவும்.

ஐஸ் கட்டிகள்- ஐஸ் கட்டிகள் இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கம் மற்றும் கருவளையத்தை குறைக்கும்.

வெள்ளரிக்காய்- வெள்ளரிக்காயில் உள்ள இயற்கை குணங்கள் சரும நிறமாற்றத்தை குறைக்கும். குளிர்ந்த வெள்ளரிக்காயை வட்டங்களாக நறுக்கி, கண்களில் வைத்தால் பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய்- இரவு தூங்கும் முன், பாதாம் எண்ணெயுடன் ஒரு துளி வைட்டமின் E சேர்த்து மெதுவாக மசாஜ் செய்தால் சருமம் ஈரப்பதமாகும்.

தக்காளி + எலுமிச்சை சாறு- தக்காளி சாறு, எலுமிச்சை சாறு கலந்து, கண்களுக்குக் கீழே தடவவும்.

உருளைக்கிழங்கு சாறு- உருளைக்கிழங்கு சாற்றை பருத்தியில் நனைத்து கண்களில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்- கற்றாழை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே கற்றாழை ஜெல்லை கண்களுக்கு கீழே மசாஜ் செய்யவும்.