புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

150

களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது.

அடுத்து, கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலையைச் செய்ததாகக் கூறப்படும் 84 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அகலவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.