புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

81

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்றுடன்  வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையும், விபத்து தொடர்பான முழுமையான விவரங்களும் இதுவரை  உறுதிப்படுத்தப்படவில்லை