புத்தளத்தில் 468 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்!

180

புத்தளம் – தலவில கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 468 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடத்தல்காரர்கள் அவற்றை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி இரவு புத்தளம் எரம்புகொடெல்ல கரையோரப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது கடற்கரை ஓரமாக சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட 15 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 468 கிலோ கிராம் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை கண்காணிப்புகள் மேலும் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.