பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை…! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

190

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ள அதேவேளை, சில பகுதிகளில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல், மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் இத்தகைய பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இதனால் ஏற்படக்கூடிய வீதி விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, பனிமூட்டமான காலப்பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.