பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

219

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும் கொள்கை ரீதியான கடுமையான முரண்பாடுகள் இருந்தாலும், தற்போது அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற அவதூறு பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளியிட்டதோடு, கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், தனிநபர் குணநலன் அல்லது தனிப்பட்ட தாக்குதல்கள் அரசியல் கலாச்சாரத்திற்கு ஏற்றவை அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொன்னம்பலத்தின் இந்த அறிக்கை அரசியல் தளத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.