பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பமாகும் ஆன்லைன் விரிவுரைகள்; களப் பயணங்களுக்குத் தடை.!

134

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இணையவழி (Online) விரிவுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், திட்டமிடப்பட்ட களப் பயணங்களை (Field Trips) தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சில அசாதாரண சூழ்நிலைகள் அல்லது நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.