பல்கலைக்கழக மாணவனுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த தம்பதி கைது.!

41

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதிகள் உட்பட மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 23 வயதான பல்கலைக்கழக மாணவர் என்றும், அம்மாணவர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவர், 12 ஆயிரம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை தம்பதியிடம் வாங்க வந்தவர் என்றும், தோட்ட வேலை எனும் போர்வையில், 6 மாதங்களாக சம்மாந்துறையில் 40 வீட்டுத்திட்டத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்து வந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, சந்தேக நபர்கள் வசம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள், 3 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வங்கி புத்தகம் பணம் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் கைதான தம்பதியினர் உட்பட மற்றுமொருவர் சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளை நீதிவான், கணவன் மற்றுமொரு சந்தேக நபரான மாணவனுக்கு தலா ரூபா 9000 தண்டப்பணம் விதித்த நீதிவான், பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வழக்கினை மறுதவணை இட்டு ஒத்திவைத்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.