பருத்தித்துறையில் சுற்றுலாப் பயணிகள் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் தாக்குதல்.!!

291

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராக இருப்பதாக கூறப்படுகிறது.

சிவில் உடையிலும் மேலாடைகள் இன்றி, மேலும் மதுபோதையில் இருந்த நிலையில் பொலிஸார் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பொலிஸ் திணைக்கள வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகின்றது.