பனி காலத்தில் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸ் போதும்!

107

தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலும், அதன் தாக்கம் சருமத்தில் அதிகமாக தெரிகிறது. பொதுவாக இப்படியான பனிப்பொழிவின் போது நிறைய பேர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. மிகவும் குளிர்ச்சியான மற்றும் வறண்ட காற்றினால், சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கி, சருமம் அதிகமாக வறண்டு போவதோடு, சருமத்தில் வெடிப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசர்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இது தவிர முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்க ஃபேஸ் பேக்குகளை போடலாம். இப்படி ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், முகச் சருமம் ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்துடனும் இருப்பதோடு, பொலிவோடும் இருக்கும். இப்போது பனியால் முகத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம். இவற்றில் உங்களுக்கு ஏற்றதை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

ஃபேஸ் பேக் #1:

  • இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு
  • பின்பு அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

 

ஃபேஸ் பேக் #2:

  • இந்த ஃபேஸ் பேக்கிற்கு தயிருடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.

 

ஃபேஸ் பேக் #3:

  • இந்த ஃபேஸ் பேக்கிற்கு பாதாமை பாலில் போட்டு இரவு தூங்கும் போது ஊற வைக்க வேண்டும்.
  • பின் அதை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம்.

 

ஃபேஸ் பேக் #4:

  • இந்த ஃபேஸ் பேக்கிற்கு முட்டையின் மஞ்சள் கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அத்துடன் சிறிது கிளிசரினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின் அதை பஞ்சுருண்டை பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடம் காய வைக்க வேண்டும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.

 

ஃபேஸ் பேக் #5:

  • இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சிறிது எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • அடுத்து அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
  • பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.