பதுளை – கண்டி வீதியில் விபத்து: கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

164

பதுளை –  கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பஸ், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.