பதட்டத்தில் சர்வதேசம். அமரிக்கவுக்கு ஈரானிய உயர்மட்டம் கடும் எச்சரிக்கை!

94

ஈரான் விவகாரத்தில் தலையிட்டால் அமெரிக்காவிற்கு அழிவு – ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் கடும் எச்சரிக்கை
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது அமெரிக்காவிற்கே அழிவை ஏற்படுத்தும் என ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டால் அமெரிக்கா தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்க தலையீடு முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும், அமெரிக்க நலன்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் ஆலோசகர் அலி ஷாம்கானி, ஈரானின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த முயற்சியும் முழுமையாக ஒழிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பொருளாதாரச் சரிவு காரணமாக ஈரானிய ரியால் கடும் மதிப்பிழப்பை சந்தித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.