பட்டப்பகலில் பயங்கரம்: சூப்பர் மார்க்கெட் அருகே மீன் வியாபாரி சுட்டுக்கொலை.!

173

மாத்தறை கந்தர தெவுந்தர பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கருகில் இன்று (21) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

டிலைட்’ எனப்படும் 55 வயது மீன் வியாபாரி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.