படுக்கை விரிப்புகளுக்குள் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!!

116

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 3.38 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயிலிருந்து 2025 நவம்பரில் வந்தடைந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றைச் சோதனை செய்தபோது இந்த பெருமளவு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சிகரெட்டுகள் “படுக்கை விரிப்புகள்” என்ற பெயரில் மறைத்து பொதி செய்யப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 507 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டவிரோத இறக்குமதியால் அரசாங்கத்திற்கு சுமார் 460 மில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணைகளில், இந்த கொள்கலன் பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முகவரிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.