நோய்களை விரட்டவும் உதவும் வாகைப்பூ! ஆச்சரியமூட்டும் மூலிகை தேநீர் ரகசியம்.

110

இந்த தேநீரை தயாரிப்பது எப்படி, என்னென்ன ஆச்சர்ய நன்மைகள் இந்த தேநீரில் உண்டு என்பது பற்றிய விரிவான சில தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்த மரம், வாகை. இது காற்றிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு தீர்வாகவும் அமைகிறது. தமிழர்களின் வீரத்தோடும் மருத்துவத்தோடும் பின்னிப்பிணைந்த இதன் பூ, மூலிகை தேநீராக பயன்படுத்த உகந்தது. வாகைப்பூ தேநீரை தயாரிப்பது எப்படி, அதனால் என்னென்ன ஆச்சர்ய பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது பற்றிய விரிவான சில தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க.முதலில் வாகைப்பூ தேநீரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இதற்கு ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த வாகைப்பூக்கள் அல்லது மொட்டுகளை நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின் அதை 200 மி.லி தண்ணீரில் போடவும். அதனுடன் 2 அல்லது 3 மிளகு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பாதி அளவு சுண்டியதும் (பூக்களின் சாறு நீரில் இறங்கியபின்) வடிகட்டி, சுவைக்காகப் பருகலாம். சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் எதுவும் சேர்க்காமல் குடித்து வாருங்கள்.

காலை மாலை என இரண்டு வேளையில் இந்த தேநீரை டீ, காபிக்கு பதிலாக குடிக்கலாம். வாரம் ஓரிருமுறை குடித்து வந்தாலே போதும். தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் மருத்துவ ஆலோசனையின்றி இதனை குடிக்க வேண்டாம். சரி, இனி இந்த தேநீரின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்…வாகைப்பூ தேநீரானது சித்த மருத்துவத்தின்படி, வாகைப்பூ வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றையும் சீராக வைக்க உதவுகிறது. உடல் வெப்பம் தணிந்து, வாதத்தினால் ஏற்படும் கை, கால் குடைச்சல் மற்றும் மூட்டு வலிகள் குறைவதாக சொல்கிறது சித்த மருத்துவம்.

காற்றிலுள்ள நச்சுக்களை நீக்குவதை போலவே, நம் ரத்தத்திலுள்ள நச்சுக்களையும் வாகைப்பூ நீக்கும். அதனாலேயே இது சிறந்த டீடாக்ஸாக கருதப்படுகிறது. நம் சுவாசப்பகுதியை சுத்தப்படுத்தி, அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஏற்படுத்தி சுவாசப்பகுதி வீக்கத்தை குறைக்கும். இருமல், நெஞ்சு சளியை கரைக்க இந்த தேநீர் சிறந்த மருந்தாக இருக்கும்.

சற்றே துவர்ப்பு மற்றும் கசப்புச்சுவையை கொண்ட வாகைப்பூ, குடலிலுள்ள கிருமிகளை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் தன்மையை கொண்டிருக்கும். இதனால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய இது உதவும்.

வாகைப்பூவிலுள்ள சாப்போனின்ஸ் என்ற மூலக்கூறு, நரம்பு மண்டலத்தை சீரமைத்து மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அடிக்கடி பதற்றமாகும் நபர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.முன்பே சொன்னதுபோல, வாகை ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதால், முகம் பொலிவு பெறுவதோடு கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் குறையவும் வாய்ப்புள்ளது.