நெற்பயிற்ச்செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி; அரசு அறிவித்த அதிகபடியான நெல் கொள்விலைகள்

135

சம்பா & கீரிசம்பா நெல்களுக்கு கொள்முதல் விலை உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம்!

சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய கொள் விலை (குறைந்த பட்ச கட்டுப்பாட்டு விலை)திருத்தத்துக்குச் சம்மதம் வழங்கியுள்ளது.

 

புதிய கொள்முதல் விலைகளின்படி நாட்டு நெல் – கிலோ ரூ.120/- (மாற்றம் இல்லை) சம்பா நெல் – ரூ.125/- இலிருந்து ரூ.130/- ஆக உயர்வு கீரிசம்பா நெல் – ரூ.132/- இலிருந்து ரூ.140/- ஆக உயர்வு என்றவாறு அமைந்துள்ளது

இந்த திருத்தம் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை அதிகரித்து, விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025 சிறுபோகக் காலத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கிய கொள்முதல் விலை பரிந்துரைகள் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு, விலைத் தீர்மானக் குழு ஆகிய அமைப்புகளின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்துள்ளது.