நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் கைது.!

113

நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க சொந்த நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்திற்கு அனுமதியளித்து அரசாங்கத்திற்கு நெருங்கிய இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.