நுவரெலியாவில் தாக்குதலுக்குப் பிறகு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு.!!

161

நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வயிற்று உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (14) ஒருவரின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் திட்டமிட்ட கொலையா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.