நீர்ப்பாசனம் முதல் விளைச்சல் வரை… துணுக்காயில் விவசாய சவால்களுக்கு தீர்வு

101

துணுக்காய் பிரதேசத்தில் 2026 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான விவசாய உற்பத்தித் திறன் குழுக்கூட்டம் நேற்று (17.02.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இ. ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வவுனிக்குள நீர்ப்பாசனப் பொறியியலாளர் இ. சுனோஜ், துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வி. வசந்தன், துணுக்காய் பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு இ. செந்தூரன், கௌரவ உப தவிசாளர் திரு வி. விஜயகுமார், பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ந. கேதீஸ்வரன் உள்ளிட்ட பல துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், விவசாய போதானாசிரியர்கள், கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புகள், நன்னீர் மீன் பிடி சங்கம் மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்க பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது, விவசாய நடவடிக்கைகளின் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன. நீர்ப்பாசன வசதி, உரம் மற்றும் விதை வழங்கல், காலநிலை மாற்றம் காரணமான விளைச்சல் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அவற்றிற்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், இவ்வகை குழுக்கூட்டங்களை எதிர்காலத்தில் காலாண்டுக்கு ஒருமுறை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.