நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி; மின் உற்பத்தியும் பாதிப்பு!

111

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்ததால், நீர்மின் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியின் தாக்கத்தால் புகழ்பெற்ற டெவோன் மற்றும் சென் கிளயார் நீர்வீழ்ச்சிகளின் நீரோட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகிறது. நீர் ஆதாரங்கள் குறைவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேநேரத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நிலவும் கடும் வெப்பத்தால் குளங்கள், ஆறுகள் மற்றும் சிற்றாறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் நீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.