நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு.

27

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்று வரும் மோதலை கருத்திற்கொண்டு மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.