நீராடச் சென்ற 19 வயது இளைஞன் மாயம்: தேடுதல் பணிகள் தீவிரம்!

164

அம்பாந்தோட்டை, தங்கல்ல – மெதல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) மாலை நீராடச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நாகுலுகமுவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞன் தனது நண்பருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தங்கல்ல பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞனை கண்டுபிடிக்க தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் கடற்கரை பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ள நிலையில், தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.