நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் விபத்து – உயிர் சேதம் எதுவும் இல்லை

117

நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் விபத்து – உயிர் சேதம் எதுவும் இல்லை

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

 

ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது இந்தச் சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏறபடவில்லை.

ஓட்டுநர் மற்றும் இணைபணியாளர்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மட்டக்களப்பு காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.