நண்பருடன் உணவகத்துக்குச் சென்று வீடு திரும்பிய மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!   

57

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19.05.2026) இரவு நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்ச் சைக்கிளில் குறித்த இரண்டு இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகமொன்றுக்குச் சென்று மீண்டும் மூதூருக்குச் செல்லும் வழியில் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ் விபத்துச் சம்பவித்துள்ளது.

இதன்போது மூதூர் ஆனைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த றிஸ்வான் சிப்கி (வயது-19) எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.