நடப்பாண்டில் இதுவரை 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு

131

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவான 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பிலியந்தலை மற்றும் தெஹிவளை காவல்துறைப் பிரிவுகளில் இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.