தை 6 முதல் 11 வரை நாட்டின் வானிலையில் மாற்றம். விடுக்கப்படும் எச்சரிக்கை.

205

வங்காள விரிகுடாவில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை
ஜனவரி 6 முதல் 11 வரை இலங்கைக்கு மிகக் கனமழை எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பாக வானிலை ஆர்வலர் நாகமுத்து பிரதீபராஜா முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


கடந்த 28.12.2025 அன்று இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் தோன்றிய காற்றுச் சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறை வெப்ப சக்தியின் பற்றாக்குறை காரணமாக இந்த காற்றுச் சுழற்சி எதிர்பார்த்த வேகத்தில் நகராமல், மிக மெதுவாக நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்துள்ளது.


இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் தெற்குப் பகுதியை ஒட்டியவாறு குமரிக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை நிலவரம்
இதன் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.
கனமழை எச்சரிக்கை (05.01.2026 – 12.01.2026)
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக,
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்
05.01.2026 முதல் 12.01.2026 வரை
கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக 06.01.2026 முதல் 11.01.2026 வரை
பல பகுதிகளில் மிகக் கனமழை பதிவாகலாம்.


வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு
இக்காலப்பகுதியில் மிக மிகக் கனமழை கிடைக்கும் சாத்தியம் அதிகம்.
அதேவேளை, இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை பெய்யக்கூடும்.
அனர்த்த அபாய எச்சரிக்கை
தொடர்ச்சியான மழை காரணமாக,
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில்
நிலச்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  1. பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
    வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களின்
    நீர்த்தேக்க முகாமையாளர்கள்
    மழை நிலவரம் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்துவது அவசியம்.
    கடல் நிலை எச்சரிக்கை
    06.01.2026 முதல்
    இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள்
    கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிகுந்த அவதானம் தேவை.
    குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகளில்
    ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்றுள்ள மீனவர்கள்
    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
    இந்த முன்னறிவிப்பை
    வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் மக்களிடையே
    பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
    மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு வானிலை மாதிரிகளின் அடிப்படையில் இந்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்.
    இருப்பினும், 06.01.2026 முதல் 11.01.2026 வரை
    மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பதிவாகுவது உறுதியானது.