தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை உறுதியாக நிற்பது அனைவரினதும் கடமை! சட்டதரணி யோதிலிங்கம்.

172

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரை அகற்றப்படும் வரை போராட்டத்தை உறுதியுடன் தொடர்வது தமிழ் மக்களின் பொது கடமையாகும் என அரசியல் ஆய்வாளர் மற்றும் சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வுக் கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த கருத்தானது தற்போது தாயகத் தமிழ் சமூகத்திலும் புலம்பெயர் உலகத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

இக்கட்டுரையில் இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது  லண்டன், தமிழ்நாடு, யூரோப் நாடுகளில் தையிட்டி விவகாரம் எதிர்ப்பு போராட்டமாக வெளிப்பட்டுள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட முயற்சிகள் தொடங்கியுள்ளன. தாயகத்தில் போராட்ட சூழலை தளர விடாமல் வைத்திருப்பதே சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.