தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்: சமரசத் திட்டம் விகாராதிபதி

182

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம்:

சமரசத் திட்டத்தை முன்வைத்த நயினாதீவு நாகதீப விகாராதிபதி

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், சமரசத் தீர்வுக்கான அதிரடி அறிவிப்பை நயினாதீவு நாகதீப விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் முன்வைத்துள்ளார்.

தற்போது செயல்பட்டு வரும் தையிட்டி திஸ்ஸ விகாரையின் நிர்வாகத்தை தன்னிடம் ஒப்படைத்தால், விகாரை அமைந்துள்ள 1.2 ஏக்கர் காணிக்கு மாற்றாக, தமது பொறுப்பிலுள்ள திஸ்ஸ விகாரைக் காணியிலிருந்து 1.2 ஏக்கர் நிலத்தை காணி உரிமையாளர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமரசத் திட்டம் குறித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அலுவலகத்தில் திடீரெனச் சந்தித்து கலந்துரையாடிய போதே, விகாராதிபதி இந்த நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.