கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட உழவர் விழா – தேவிபுரத்தில்

158

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் உழவர் விழா, விளையாட்டு நிகழ்வுகள் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் விளையாட்டு நிகழ்வுகளுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.

வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் கனடியநாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

தேவிபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன். நிகழ்வகல் மரநடுகை, மாணவர்களுக்கான போட்டிகளோடு அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் எனபன சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசில்களும் தேவையுடவர்களுக்கு பொருளாதார உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, உழவர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட வேண்டுமெனவும் இதன் மூலம் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமெனவும் குறிப்பிட்டார்.