தேசிய ரோபோ தொழில்நுட்ப போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.

107

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய ரோபோ போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களையும் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வெற்றி மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில், தரம் 12 மாணவர் ம. சருஜன், AERIS 3.0 என்ற திட்டத்திற்காக Productivity, Industry & Environment பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதேபோல், தரம் 11 மாணவர் சி. சுதர்ஷன், Aqua Guardian என்ற திட்டத்திற்காக Health & Medical பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை வென்றுள்ளார். ரோபோ தொழில்நுட்பப் பிரிவில், தரம் 12 மாணவர் இ. ஆதர்சன், Field Rover திட்டத்திற்காகவும், தரம் 12 மாணவி த. தமிழ்பிரியா, Menstrual Reminder திட்டத்திற்காகவும் தத்தமது பிரிவுகளில் மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர். மேலும், தரம் 9 மாணவர் இ. துலக்சன், Smart Wicket Defender திட்டத்திற்காக Entertainment பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது. மாணவர்களின் இந்த சாதனைக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதுடன், எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.